கோவை, ஆக. 21- பம்புசெட், உதிரிபாகங்கள், போர்வெல் கம்ப்ரசர்கள் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை குறைக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது, ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளது, இதனால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி எண் இருந்தால் மட்டுமே பெரிய நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் வழங்குகின்றனர்.இதனால் தொழில்கள் நசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே. பம்புசெட், உதிரிபாகங்கள், போர்வெல் கம்ப்ரசர்கள் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: