ராய்பூர்,

சத்தீஸ்கரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஞாயிறன்று இரவு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் உயிரிழந்தன.   இது குறித்து மருத்துவமனை அதிகாரிகள், ஞாயிறன்று இரவு சிறிது நேரம் மட்டும் ஆக்ஸிஜன்  குறைந்த அழுத்ததில் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்ஸிஜன் விநியோகிக்கும் ஊழியர் பணியின் போது மது போதையில் இருந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் ராமன் சிங், குழந்தைகளின் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: