சங்கராச்சாரியாரும், வள்ளலாரும்

ஒரு முறை வள்ளலாரும், காஞ்சி சங்கராச்சாரியாரும் பேசிக்கொண்டார்கள். உலகின் தாய் மொழி சமஸ்கிருதம் என்றார் காஞ்சி சங்கராச்சாரியார். அப்போது கோபப்படாமல் வள்ளலார், உலகின் தாய் மொழி சமஸ்கிருதம் என்றால் உலகின் தந்தை மொழி தமிழ் என்றார் அமைதியாக. அதிகாரத்தின் துணையுடன் பயணித்தது சமஸ்கிருதம். எந்த அதிகாரத்தின் துணையில்லாமல் வளர்ந்தது தமிழ்.தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பிற்கு எதிராக போராடிய போது 67 பள்ளிகளில் தான் இந்தித் திணிக்கப்பட்டிருந்தது.

இன்றைக்கு அனைத்து ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிலும் இந்தி உள்ளது.ரயில்வே துறையில் கடந்த ஆண்டு 650 ஸ்டேசன் மாஸ்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்களில் 495 பேர் இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த 495 ஸ்டேசன் மாஸ்டர்கள் தமிழ் இலக்கணத்தில் 45 மதிப்பெண்கள் பெற்றவர்களாம். நாமே தமிழ் இலக்கணத்தில் பிழையுடன் எழுதுவோம். ஆனால் பீகார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் இலக்கணத்தில் தேர்ச்சி பெற்றதாக கூறுவது மோசடியானது. மோடி ஆட்சியில் எல்லாமே பிராடு, பித்தலாட்டம் தான்.

-சு.வெங்கடேசன்

தமுஎகச பொதுச் செயலாளர்

Leave a Reply

You must be logged in to post a comment.