கோவை, ஆக.21- கோவை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான தலைமை அதிகாரியாக தகுதியில்லாத நபரை நியமித்துள்ளதை ரத்து செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்ததிட்டத்தினை செயல்படுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஆளும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகளான சுகன்யா என்பவரை எவ்வித தகுதியுமின்றி தேர்வு செய்துள்ளனர்.இதனால் இத்திட்டம் செயல்இழந்து போவதோடு லஞ்சம், ஊழலுக்கு வழிவகுக்கும். எனவே இந்த முறைகேடான நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி திங்களன்று ஆம் ஆத்மி சட்சியின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: