கோவை, ஆக. 21-
குடிசை மாற்று வாரிய வீடு வழங்க 36 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் குடியிருப்பு வாசிகள் மனு அளித்தனர். கோவை வி.எச்.சாலை சி.எம்.சி காலனி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மட்டசாலை என்ற பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு கட்ட கடந்த 2014ம் ஆண்டு 377 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது.

ஆனால், அப்பகுதிக்கு இதுவரை மின்சார வசதி கூட செய்து தரப்படவில்லை. இந்நிலையில், வெள்ளலூரில் உள்ள குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு செல்ல வேண்டும். அங்கும், வீடு வழங்க 4 நாட்களுக்குள் 36 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அதிகாரிகள் சிலர் மிரட்டுகின்றனர்.எனவே, இதன் மீது ஆட்சியர்தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாற்று இடங்களுக்கு சென்றால் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் தற்போதுள்ள அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டி மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: