சேலம், ஆக. 21- எட்டு மணி நேர வேலை கோரி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு எட்டு மணி நேர வேலை வழங்க வேண்டும். இலாகா ஊழியர்களாக பணி வழங்க வேண்டும். கமலேஸ் சந்திரா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இலக்கு நிர்ணயம் என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டும் அதிகாரிகளை கண்டித்து சேலம் அஸ்தம்பட்டி அஞ்சல் நிலையம் முன்பு கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் 6வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் சேலம் மாவட்டத்தில் 350 கிளை அலுவலக பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: