பொள்ளாச்சி, ஆக. 21- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் 55 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் அக்கட்சியினர் ரத்த தானம் செய்தனர். பொள்ளாச்சி – பாலக்காடு ரோட்டில் உள்ள நகரத்தார் திருமண மண்டபத்தில் திங்களன்று நடைபெற்ற முகாமிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் ச.பிரபு தலைமை வகித்தார். கோவை மாவட்ட பொருளாளர் ஞானவேல், மாவட்ட செய்தி தொடர்பாளர் தமிழ்குமரன், மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வம், ஆனைமலை மேற்கு ஒன்றியசெயலாளர் கம்பர், தெற்கு ஒன்றிய செயலாளர் மாசானி முத்து, உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் 26யூனிட் ரத்த தானம் வழங்கப்பட்டது. முடிவில்,இளஞ்சிறுத்தை பாசறை மாவட்ட அமைப்பாளர் செந்தில் முருகன் நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.