ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் 15 நாட்களில் கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்ற அம்மாவட்ட துணை ஆட்சியர் உத்தரவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள கங்கிதலா கிராமத்தில், 15 நாட்களில் கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என அம்மாவட்ட துணை ஆட்சியர் கர்டார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கிராமத்தில் 19 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் வீட்டில் கழிப்பறை கட்டியுள்ளனர். இது தொடர்பாக ஆய்வு நடத்திய கிராம பஞ்சாயத்து, திறந்த வெளியில் இயற்கை உபாதையை கழிப்பவர்களுக்கு அபராதம் மட்டும் விதித்தது. இதனால், கழிப்பறை கட்டாத வீடுகளில் மின்சாரத்தை துண்டிக்க உத்தரவிட்டேன் என்றார். இந்த உத்தரவிற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: