புதுதில்லி,

அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் நில உரிமை இயக்கத்தின் சார்பில் நாட்டில் உள்ள 150க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி/ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

தலைநகர் தில்லியில் நாடாளுமன்ற வீதியில் நடைபெற்ற பேரணி/ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர்கள் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்களின் தலைமையில் பிரம்மாண்டமான பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 15 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. சில இடங்களில் விவசாயிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஹர்யானா மாநிலத்தில் ரோஹ்டக் நகரில் மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் 19 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. திரிபுராவில் எட்டு மாவட்டங்களிலும், பஞ்சாப்பில் 13 மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தில் 13 மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுடனும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இவ்வாறு நாடு முழுதும் விரிவான அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதனை அகில இந்திய விவசாயிகள் சங்கம் பாராட்டுகிறது. இதனை மேலும் விரிவானமுறையில் எதிர்காலத்தில் எடுத்துச்  செல்ல வேண்டும் என்றும் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: