சியோல்,

தென்கொரியாவில் கப்பல் கட்டுமானப் பணியின் போது எதிர்பாராத விதமாக எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 4 பேர் பலியாகினர்.

தென்கொரியாவின் சாங்வோன் நகரில் உள்ள எஸ்டிஎக்ஸ் கடற்பகுதியில் கப்பல்களின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு புதிய கப்பல் கட்டுமான பணியின் போது தொழிலாளர்கள் கப்பலின் உட்பகுதியில் வண்ணம் பூசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கப்பலின் எண்ணெய் டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.