உலகை உய்விக்க வந்துதித்தது

ஒருலட்சத்து இருபத்து நான்காயிரம்

நபிமார்களென்று

திருக்குர்ஆன் காட்டியது

இறுதியாக வந்துதித்தது

அண்ணல் முகம்மது நபி

சொல்லிக் கொண்டிருந்தபோதே

செல்லமகள் கேட்டாள்

இத்தனை இத்தனை

ஆண் நபிகளுக்கு மத்தியில்

ஏன் வாப்பா இல்லை

ஒரு பெண் நபி…

—-ஹெஜ்.ஜி.ரசூல்

திருப்பூர் குமரன் சிலை முன்பு எழுத்தாளர்க

ளின் போர் பிரகடனம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது.  அது   த.மு.எ.க.ச.வின் மாநில மாநாடு.

மழை வருவதற்கான எல்லா சமிக்ஞையோடும் கருத்த மேகங்கள் தலையின் மீது திரண்டு நின்றுகொண்டு இருந்தது.  கண்ணாடி போட்ட ஒல்லியான உருவம் தனது பேச்சின் ஊடே எந்த

அலங்கார வார்த்தைகளும் இட்டு நிரப்பாமல் எளிமையான வார்த்தையில் மெல்லிய குரலில்

அங்கு கூடியிருந்த எல்லோரையும் கலங்கடித்துக் கொண்டு இருந்தார். கவிதை

எழுதியதற்காய் தான் சந்தித்த வாழ்வின் துய

ரத்தை  சொல்ல சொல்ல எல்லோரும் கண்ணீர் துளிகளை தாங்கியபடி கேட்டுக்கொண்டு இருந்தனர். பத்வா வாங்கிய படைப்பாளன் தனது மகளின் திருமணத்தில் கூட நிற்க முடியா

மல் செய்த மத கட்டமைப்பின் முகத்தை சமூகத்தின் முன் வைத்தபடியும், தான்  எப்போதும்  மதங்களைக் கடந்து மனித குலத்தை நேசிப்பவனாகவும் மதத்தின் பெய

ரால் மனிதர்கள் மீது தொடுக்கப்படும் இன்னல்களுக்கு எதிராக சமரசமற்று தனது பேனாமுனை கொண்டு சமர் புரிவேன் என்றும் பிரகடனம் செய்தார்  கவிஞர்.ரசூல்.  அந்த

ரசூல் சில தினங்களுக்கு முன் அகால மரணம் அடைந்தார்.

நவீன இஸ்லாமிய படைப்பில் ரசூலின் எழுத்துக்கள் முக்கியமான இடத்தில் இருக்கி

றது. அவர் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பு எழுத்தாளர் என்ற மாயத் தோற்றம் எப்போதும் அவருக்கு எதி

ராக கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கி

றது. ஆனால் அவர் தனது படைப்பின் வழியே

இஸ்லாமியர் வாழ்வையும், அவர்கள் மீது

நடத்தப்படுகின்ற தாக்குதல்களையும் இஸ்லா

முக்குள் நிலவும் பிற்போக்கு சிந்தனைகளையும் கேள்வி எழுப்பினார். அந்த கேள்வியில் உண்மை இருந்தது. பெண் விடுதலை இருந்தது.

சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் பார்வை  இருந்தது. ஏற்றத் தாழ்வு குறித்த நியாய உணர்வு இருந்தது. அவையெல்லாம் இருந்ததால்தான் அவர் தனித்துத் தெரிந்தார். பல நேரங்களில் திருகுரானிலேயே அப்படி சொல்லி உள்ளது அதனைப் பரிசீலனை செய்யுங்கள் என்ற வேண்டுகோள் இருந்தது.

“ஆண் குழந்தை, பெண் குழந்தை என பாரபட்சம் காட்டுவதை நபிகள் நாயகம் தடுக்கிறார்கள். அப்படி பார்ப்பவர்களுக்கு அல்லா சொர்க்கம் தரமாட்டார்” என்ற வச

னத்தை நம்பிக்கையாளர்களுக்கு சுட்டி பாலின

பேதமைக்கு எதிராக தொடர்ந்து தனது படைப்பின் வழியே முன்வைத்தார். அவரு

டைய படைப்புக்களில் பெண்ணிய பார்வை எப்போதும் கூர்மையாய் கூடுதலாய் இருந்தது. ஆதாரத்தோடு எதனையும் அணுகினார்.

“திருக்குர்ஆன் முன்வைக்கும் பலதார

மணம் தொடர்பாக வரும் வசனங்கள் யுத்தக்காலத்தில் முன்வைக்கப்பட்டவை. ஆனால் அதனை இப்போது அமைதிக்கால சூழல்களில் பெண்கள் மீது திணிப்பது சரியான அணுகுமுறையல்ல” என்று குறிப்பிட்ட ரசூல் இன்னொரு இடத்தில் அரேபிய ஷேக்குகள் இங்கு வந்து முஸ்லிம் பெண்களை திருமணம் செய்துவிட்டு இரண்டு மாதம் கழித்து தலாக் கூறி அந்தப் பெண்களை  நிராதரவாக விட்டு

விட்டுப் போகும் அவலத்தையும்,  பெண்கள் மீது  மதத்தின் பெயரால் நடத்தும் வன்முறை

களை எந்த சாய்வும் இல்லாமல் எழுத்தின் வழி அம்பலப்படுத்தினார்.

“முஸ்லீம் ஷரியத் நீதிமன்றம், ஜமாஅத் நீதிக்குழு அனைத்தும் ஆண் சார்ந்தே கட்ட

மைக்கப்பட்டுள்ளது அதில் பெண்கள் பங்க

ளிப்பும் இருக்க வேண்டும்” என்று வலுவாக தனது எழுத்தின் வழி முன்வைத்தார். “பெண்கள் எந்த ஆடையை அணிய வேண்டுமோ அதனை இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்ய  முடியாது. அந்தப் பெண்களின் உரிமை என்று கூறிய அவர் அப்படித் தலையிடுவது பெண்களின் விருப்பத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதிகாரம் செய்வதாகும் என்று தொடர்ச்சியாகப் பெண்ணிய பார்வை அவரு

டைய எல்லா படைப்பிலும் இருந்தது.

அதேபோல் பல படைப்புகளின் வழியே இஸ்லாம் மதத்துக்குள் எழுப்பப்படவேண்டிய நியாயமான கேள்விகளை தானொரு முற்போக்காளன் என்ற இடத்திலிருந்து  நுட்ப

மாகப் பதிவு செய்தார். நபிகள் நாயகம் அருகில் எப்போதுமே இருந்த கருப்பு அடிமை பிலால் எழுப்பும் கேள்வி போலே

‘‘அண்ணல் நபிமுகமதுவின் அருகிருந்தும்

மதீனா நாடாண்ட அபூபக்கர் போல்

உமர் உஸ்மான் அலியைப் போல்

கறுப்பின அடிமை நான் ஏன்

ஒரு கலீபா ஆக முடியவில்லை“ என்ற

கேள்வி மிக காத்திரமானது.  மிக சாதாரணமாக கடந்து போகக் கூடிய கேள்வி அல்ல  என்பதைத்

தெரிந்தே ரசூல் எழுப்பினார். முகம்மது நபிக்கு நிறவேற்றுமை பார்க்கும் பாகுபாடு இருந்ததா?

அவரின் படைப்பின் வழியே இஸ்லாமிய அமைப்புக்குள் இருக்கும் தலித் முஸ்லிம் ஒடுக்குமுறையும், இந்து சமூகத்தில் இருக்கும் சாதிய படிநிலை இன்னும் எங்கெல்லாம் உள்ளது என்பதை தனது “ தலித் முஸ்லிம்” புத்த

கத்தின் வழியே குறிப்பிடுகிறார். நாட்டுப்புற தெய்வங்களை வணங்கிப் பழகிய இந்திய சமூகத்தில் இஸ்லாம் மதம் மாறிய பின்பும்

அதனின் தொன்ம வழிபாடாக  தர்கா கலாச்சா

ரம் இருந்து வருகிறது.  ஆனால், தற்போது தர்கா கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை இழிந்தவர்களாக, காபிர்களாக, பித்அத்துகளை மேற்கொள்பவர்களாக கருதுவது தவ்ஹீது பிராமணியத்தை கட்டமைக்கும் வகாபிகளின் நவீன தீண்டாமை என்று அழுத்தமாக பதிவு செய்கிறார்.

வட மாநில பகுதிகளில் இஸ்லாம் சமூகத்தி

லும் தனி இடுகாடு பழக்கம் இருப்பதையும் அதற்கு எதிரான தலித் முஸ்லிம் மக்களின் போராட்டத்தையும் அந்தப் புத்தகத்தில் பதிவு

செய்கிறார். அவர் முன்வைக்கும் எளிய கேள்விகள் கூட பல அதிர்வுகளை உண்டாக்கி

உள்ளது என்பது நிதர்சனம். அந்தக் கேள்விக

ளில் ஒரு ஜனநாயகத் தன்மை இருந்தது. அந்த ஜனநாயகத் தன்மையை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத வெளிப்பாடே சமூக விலக்கு என்ற “பத்வா நோக்கி அவரைத் தள்ளி தனிமைப் படுத்தியது. ஆன போதும் அவருடைய படைப்பில் உண்மையை கேள்விக் குள்ளாக்கும்  வீச்சு குறையவில்லை.  அதேநேரத்தில் இஸ்லா

மியர் என்ற காரணத்தினால் அவர்கள் மீது இந்துத்துவ வாதிகளால் நடத்தப்படும் வன்முறைகளுக்கு காட்டமாக எதிர்வினை ஆற்றினார்.

அவருடைய கவிதைகளில் இஸ்லாமிய மக்கள் பயன்பாட்டில் இருக்கும் வட்டார

சொற்களையும், இஸ்லாமிய வார்த்தைகளை

யும் தொங்குசதை போல் அல்லாமல் எங்கு எது தேவையோ அங்கு நேர்த்தியாக வடித்தார். அவருடைய மொழி உணர்வும் அதில் கவி

தைக்கான அழகியலோடு இருந்தது.

இறைவன் ஆணுமில்லை பெண்ணுமில்லை

அவனை யாரும் பெறவுமில்லை

அவன் யாரையும் பெறவுமில்லை

ஆண் தன்மையும் பெண் தன்மையும் அற்ற

என் அல்லாவை

எப்படி அழைப்பேன்

என் தமிழில்  என்று எழுதினார்.

குழந்தைகளுக்கு எந்த மதமும் தெரியாது எந்த மார்க்கமும் தெரியாது. குழந்தை குழந்தை

யாகவே இருக்கவே விரும்புகிறது என்பதை “பொட்டு வச்சுப் பார்க்க / எனக்கும் ஆசை / உம்மா திட்டுவாளோ” என்று  குழந்தை உள

வியலை அவரின் கவிதை வழியே பதிவு செய்கிறார்.  மற்றொரு இடத்தில் பொருளாதார தேடலுக்காக இஸ்லாமிய குடும்பத்து ஆண்கள் வெளிநாடுகளுக்குப் போவதும் அதனால் ஏற்படும் குடும்ப உறவின் ஏக்கத்தை

ஒட்டியிருந்த நிமிடங்களை விட

விலகி இருந்த பொழுதுகளே அதிகம்.

கட்டிப்பிடித்து குழந்தைக்கு

ஒரு செல்லமுத்தம் கொடுக்கக் கூட

வருசங்கள் சில காத்திருக்க      வேண்டியுள்ளது.

முன்பு உம்மாவைப் பிரிந்து வாப்பா

இப்போதெல்லாம் உன்னைப் பிரிந்து நான்

இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் போராட்டத்தை பதிவு செய்யும் ரசூலின் எல்லா

படைப்புகளுமே எளிய மக்களின் பிரதிநிதியாக அம்மக்களின் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், வெறுப்பு,

இயலாமை என எல்லாவற்றையும் பதிவு

செய்தது. இஸ்லாமிய மக்களின் இலக்கிய

த்தைத் தமிழுக்குத் தந்த பலரின் பங்களிப்பில் ரசூலுக்கு தனித்த இடம் உண்டு. குறிப்பாக கடலோர இஸ்லாமிய மக்களின்  வாழ்வை பழக்க வழக்கத்தை  ரசூல் மட்டும் தான் தனது படைப்பின் வழியே தமிழுக்கு இன்னும் கூர்மையாகக் கொடுத்தார். அவர் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாத அமைப்புகள் அவரை கிறிஸ்துவ மதத்தின் கைக்கூலி என்று அடைமொழி மட்டும் சூட்டி

யது.   ரசூலின் ஒட்டுமொத்த  படைப்புலகம் ஒரு

கேள்வியை மட்டும் மைய சரடாக எல்லா இடங்களிலும் மௌனமாக  கேட்டு  பதிலுக்காக

நிற்கிறது.  இஸ்லாமியத்தில் ஜனநாயக தன்மை

யோடு கூடிய பகுத்தறிவு வாதத்திற்கு இடம் இல்லையா? என்பதே. ரசூலின் படைப்புலகம் முன்வைக்கும் கேள்வி. சமீபத்தில் பகுத்தறிவு பேசியதற்காக கோவையில் பாரூக் என்ற பகுத்தறிவாளர்  படுகொலை செய்யப்பட்ட பின்பு ரசூலின் கேள்வி இன்னும் கூர்மையாகி

விட்டது.   அந்தக் கேள்விக்கு விடைதேடுவது ரசூலுக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

Leave A Reply

%d bloggers like this: