லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் 15 வயது சிறுமி அப்பகுதி காவலர் மற்றும் கிராம தலைவரால்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த சிறுமியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் கோபால்நகரை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரவு இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டின் அருகில் உள்ள வயல்காட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கோபால்நகர் பகுதி காவலர் மற்றும் கிராம தலைவர்  சிறுமியை வழி மறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமியின் கூச்சலை கேட்ட அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரின் பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவலர் மற்றும் கிராம தலைவர் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த சிறுமியின் தந்தை  சிறிது நிமிடங்களிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: