லக்னோ,

உத்தரப்பிரதேசத்தில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பூரியில் இருந்து ஹரித்வார் மற்றும் கலிங்கா செல்லும் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் முசாஃபர் நகரின் கட்டாலி என்ற பகுதியில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 6 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டது. இதில் 23 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் இன்று காலையுடன் முடிவடைந்து விட்ட நிலையில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3.5 லட்சம் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5௦ ஆயிரமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று ரயில்வேதுறை அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: