கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவுள்ள இனயம் துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 48 கிராமங்களை சேர்ந்த மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இனயத்தில் 27 ஆயிரம் கோடி செலவில் சர்வதேச வர்த்தக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச துறைமுகத்தினால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் எனக் கூறி மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பல கட்டபோரட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள 48 மீனவ கிரமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.