தில்லி,

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டுவரப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டுமாவது பொதுத்தேர்வு நடத்த வேண்டும் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதுபற்றி விழா ஒன்றில் பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை கொண்டுவர 24 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. அதனால் விரைவில் பொதுத் தேர்வு முறை கொண்டு வரப்படும். இந்த தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களுக்கு அடுத்த மாதமே மறுதேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்படும். கல்வியின் தரம் உள்ளிட்ட 5 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வருவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: