தில்லி,

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 -17 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்தது.இந்நிலையில் ஆதார் எண் இணைப்பதில்   ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், இன்று நள்ளிரவு 12 மணி வரை வருமான வரித்துறை அலுவலகம் திறந்திருக்கும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: