நாட்டின் வடபுலத்தில் பல்வேறு பகுதிகளில் பல மொழிக்கூட்டங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் ஹிந்தி மொழியின் ‘வழக்கு மொழி’ என்ற பொய்மையில் புதைக்கப் பட்டுவிடுகிறது.
ஹிந்தி டெல்லியிலும், அதை சுற்றியுள்ள சில பிரதேசங்களிலும்,சில மாநில தலைநகர் போன்ற நகரப் பகுதிகளில் தான் பேசப்படுகிறது.

இமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், உ.பி-வடமாநிலங்கள்,ம.பி &சதீஸ்கார்-என மத்திய மாநிலங்கள்,கிழக்கே பிகார்,ஜார்கண்ட் ஆகிய மொத்த நிலபரப்பும் “ஹிந்தி இதயமான பகுதி”(Hindi Heartland) என சொல்லி இவர்களது பூர்வீகமான தாய்மொழிகள் அனைத்தையும் “வழக்கு மொழி”( local dialects) என தரம்தாழ்த்திவிட்டனர்-ஹிந்தியின் ‘தேசிய அந்தஸ்தை’ காப்பாற்ற இந்த மக்கள் மொழியின் ஸ்தல வரலாறு, பாரம்பரியம், மொழியின் தனித்தன்மை ஆகிய அனைத்தையும் புறந்தள்ளுதல் புறக்கடைவழியாக நடக்கிறது.

#பிகார்; இங்கு ஹிந்தியும், உருதும் அதிகாரப்பூர்வமான மாநில மொழியாக அறிவிக்கபட்டுள்ளது.இது தவிர அங்கு அங்கிகா,பஜ்ஜிகா,மஹாகி,போஜ்பூரி,மைதிலி ஆகிய மொழிகளை மக்கள் பேசுகின்றனர். இவை அனைத்தும் இந்தோ-ஆரிய மொழிகுடும்பத்தை சேர்ந்தவை. 1961-மக்கள் தொகை கணக்கெடுப்பில் இவைகள் அனைத்தையும் “ஹிந்தி”மொழி எனும் குடுவையில் அடைத்து விட்டனர். இதில் ‘மைதிலி’எனும் மொழி மட்டுமே தப்பி பிழைத்து 2004-ல் அரசியல் சட்ட அட்டவணை மொழியாகிவிட்டது.அதேபோல் ‘சந்தாலி’எனும் மொழியை பழங்குடி மக்கள் சுமார் நான்கு கோடி பேர் பேசுகிறார்கள். இதை ஆட்டைக்கே இவர்கள் சேர்க்கவில்லை.

#உத்திபிரதேசம்;மத்திய உ.பி மற்றும் பண்டல்கண்ட் என அழைக்கப்படும் ஜான்சி, லலித்பூர் ஆகிய பகுதிகளில் ‘பண்டலி'(Bundle) என்ற மொழி பேசுகின்றனர். இந்த மொழியை அண்டை மாநிலமான ம.பி மற்றும் சதீஸ்கார் ஆகியவற்றில் ஒரு பகுதியில் பேசுகின்றனர். கிழக்கு உ.பி-யில் போஜ்பூரி மொழியே கோலோச்சி உள்ளது. மேற்கு உ.பி-யில் ‘பிராஜ்’பாஷை என்பதே இவர்களது மொழி.டெல்லியை ஒட்டிய மேற்கு உ.பி-யில் ‘காதிபோலி’ எனும் கொஞ்சம் ஹிந்தியோடு இணைந்த மொழி பேசுகின்றனர்.
ஆகவே தென்னிந்தியா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மட்டும் அல்லாது வட இந்தியர்களும் விழிப்போடு இருக்க வேண்டும்.வடபலத்து மக்கள் தங்களது புலம்சார் மொழிகளை கைவிட கூடாது. “இந்தி இணை தேசியவாதம்” இவர்களது அடையாளம் அல்ல. இவர்களது அடையாளம் தனித்துவமானது-மொழி அடிப்படையில். அது பயிற்று மொழியாக ஆக்கப்பட்டு பாடதிட்டம் மற்றும் புத்தகங்கள் தயாரிக்கபட வேண்டும்.

இந்தி இவர்களின் தாய்மொழி அல்ல. ஒரு தாய் மொழிக்கே ஒரு பொய்யான கட்டமைப்பு கொடுத்து காப்பாற்ற முடியாது. அது வரலாற்றில் நிற்காது.
பன் மொழி செழித்த பூந்தோட்டமே இந்தியா.அதுவே எங்களது அடையாளம். இதைகொண்டே மேற்கித்திய காலனிய ஆதிக்கத்தை எதிர்த்தோம். அதில் வெற்றியும் பெற்றோம். இது இந்திய அடையாளத்திற்கு எதிரானது அல்ல. சில வீணர்கூட்டம் நமது பன்முக தன்மையை முரண்பட்டதாக நிறுத்த முற்படுகின்றனர்.ஆகவே வட இந்தியர்களும் இந்த திணிப்புக்கு எதிராக நிறக வேண்டும். அது உங்களது தாய் மொழியை காப்பாற்றவதற்கே அவசியமாகும்.

Karumalaiyan

Leave a Reply

You must be logged in to post a comment.