குஜராத்தில் காங்கிரஸ் கட்சியினர் மீது மோடியின் பாஜக அரசு நடத்தும் ரெய்டுகளும், அதற்கான நோக்கங்களும் அனைவருக்கும் தெரிகிறது. எல்லாம் மிக பகிங்கரமாகவே நடக்கிறது. ‘ஜனநாயகப் படுகொலை’ என்றும், ‘பாஜகவின் மோசடித்தனம்’ என்றும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுகின்றன. ஆனால் பெரிய அளவிலும், உரத்தும் ஒலிக்கவில்லை என்பதை உணர வேண்டும்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் இதுபோல நடத்திய ஜனநாயகப் படுகொலைகளின் வழித்தடம் பற்றியே இங்கு அநியாயங்களும், அநீதிகளும் பரிணாமம் கொண்டிருக்கின்றன. அணு உலை ஒப்பந்தத்தின் போது, இடதுசாரிகள் அரசுக்கு தந்த ஆதரவை விலக்கிக்கொள்ள, அப்போது நடந்த விவாதத்தில் காங்கிரஸ் பேசிய பேரம் பாராளுமன்றத்தில் ருபாய் நோட்டுகளாகப் பறந்தன. அதனாலேயே காங்கிரஸ் கட்சி, மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பாஜகவிடம் மோதுவதற்குரிய தார்மீக பலம் இழந்து நிற்கிறது.

அப்போதும், இப்போதும் இந்த ஜனநாயகப் படுகொலைகளை கண்டித்தும், அவைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதும் இடதுசாரிக் கட்சிகளே! கம்யூனிஸ்டுகளே!

  • Mathava Raj

Leave A Reply

%d bloggers like this: