கோவை, ஆக. 3
விரிவான காப்பீட்டு திட்டத்தில் கேன்சர், எம்ஆர்ஐ ஸ்கேன் சிகிச்சைகள் சேர்க்கப்படும் என திட்ட இயக்குனர் செல்வவிநாயகம் கோவையில் தெரிவித்துள்ளர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரிவான காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், புதிய அம்சங்கள் புகுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திட்ட இயக்குனர் செல்வவிநாயகம் தலைமை தாங்கினார். மேலும், சுகாதார துறைதுணை இயக்குனர் பானுமதி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தலைமை நிர்வாகி சிவக்குமார், எம்டி இந்தியா உதவி பொதுமேலாளர் சாய்நாத், தலைமை மருத்துவ அதிகாரி ஐஸ்வர்யாராஜ், மற்றும் காப்பீட்டு திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதன்பின் திட்ட இயக்குனர் செல்வவிநாயகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், விரிவான காப்பீட்டு திட்டம் கடந்த 2012ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1027 வகையான சிகிச்சைகளுக்கு 752 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.4,100 கோடி செலவில், 20 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தின் தரத்தை உயர்த்தும் பொருட்டு, பல புதிய அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில் சிகிச்சை பெறும் பயனாளிகள் தங்களின் குறைகளை 1800 425 3993 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். புகார் பதிவானதும் பயனாளிக்கு எஸ்எம்எஸ் வரும். மேலும் பயனாளிகள் தெரிவிக்கும் அனைத்து புகார்களும் பதிவு செய்யப்படும். சிகிச்சை பெற்ற பயனாளிகளின் நிலை குறித்து அவர்களின் வீடுகளுககு சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும். காப்பீட்டு திட்டம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் திட்டத்தில் உள்ள அனைத்து சிகிச்சைகளையும் இல்லை என்று கூறாமல் இலவசமாக செய்ய வேண்டும். மீறி
னால் நடவடிகைக்கை எடுக்கப்படும்.

மேலும் கேன்சர், எம்ஆர்ஐ ஸ்கேன் என்பது உள்ளிட்ட 524 சிகிச்சைகள் கூடுதலாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.