பாட்னா, ஆக. 3-
பீகாரில் வியாழன் அன்று ஒரு டிரக்கில் பசு மாட்டுக்கறி கொண்டு சென்றார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள், சந்தேகத்தின்பேரில் மூன்று பேரை அடித்துநொறுக்கினார்கள்.

இந்தச் சம்பவம் தேசிய நெடுஞ்சாலை 84இல் போஜ்பூர் மாவட்டத்தில் சாஹ்பூர் என்னுமிடத்தில் நடைபெற்றுள்ளது. பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த ஆட்கள் மேற்படி டிரக்கையும் தீ வைத்துக் கொளுத்திட முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்த சென்றதைத்தொடர்ந்து அது தடுத்துநிறுத்தப்பட்டது.  காவல்துறையினர் மேற்படி மூவரையும் காவல்நிலையத்திற்க அழைத்துச் சென்றுள்ளனர்.  டிரக் ஓட்டுநர், தாங்கள் காளை மாட்டுக் கறிதான் எடுத்துச் சென்றதாக காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் பொறுப்பேற்றுள்ள கால்நடைத்துறை அமைச்சர் பசுபதி குமார், மாநிலத்தில் இயங்கும் அனைத்து சட்டவிரோத இறைச்சிக்கூடங்களும் மூடப்படும் என்று அறிவித்திருந்தார்.

“பாஜக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, இதுபோன்று பசுப் பாதுகாப்புக் குண்டர்களின் வெறியாட்டங்களும், கொலைபாதக செயல்களும் வழக்கமான நடவடிக்கைகளாக மாறிடும்,” என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் ஒருவர் கூறினார்.B

Leave a Reply

You must be logged in to post a comment.