பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரக்ஷா பந்தன் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ரூ. 74-க்கு ரீசார்ஜ் செய்து அன்லிமிட்டெட் ஆன்-நெட் வாய்ஸ் கால், டேட்டா சலுகைகளை பெறலாம்.

இந்த ரிசார்ஜ் செய்வோருக்கு ஐந்து நாள் வேலிடிட்டி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், 1 ஜிபி டேட்டா மற்றும் ரூ. 74 டாக்டைம் வழங்கப்படுகிறது.

புதிய சலுகையை ஆகஸ்டு 3-ம் தேதி முதல் 12 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்து பெற முடியும். இத்துடன் ரூ.189, ரூ.289 மற்றும் ரூ.389 விலையில் திட்டங்களுக்கு 18 சதவிகிதம் கூடுதல் டாக் டைம் மற்றும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.