ஈரோடு, ஆக. 3-
பவானிசாகர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து 51 அடியாக நீடிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை கடந்த சில தினங்களக்கு முன்பு 38 அடியி
லிருந்து உயர்ந்து 51 அடியை எட்டியது. இருப்பினும் கடந்த 10 நாட்களாகவே அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இதற்கிடையே, அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் புதனன்று மிதமான மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரலாம் என கருதப்பட்டது. இருப்பினும் இந்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை.

இதனால் வியாழனன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 51.12 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 119 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றுக்கு குடிநீருக்காக 165 கன அடி வீதமும், வாய்க்காலுக்கு 5 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

வனப்பகுதியில் சாரல் மழை
இதற்கிடையே, ஈரோடு மாவட்ட வனப்பகுதியான ஆசனூர், தாளவாடி, தலமலை ஆகிய வனப்பகுகளில் புதனன்று இரவு சாரல் மழை பெய்தது. இந்த மழையால் இந்த வனப்பகுதி குளிர்ச்சியாக காணப்படுகிறது. மேலும், வியாழனன்று விடுமுறை நாள் என்பதால் ஆசனூர் வனப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.