ஈரோடு, ஆக. 3-
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வீழ்ந்த தீரன் சின்னமலையின் 212 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஓடாநிலை தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் மலர்மாலை அணிவித்து நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மேலும்,செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா ஓடாநிலையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் வரவேற்புரையாற்றினார். அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பி.தங்கமணி, கே.சி.கருப்பண்ணன், திண்டுக்கல் சி.சீனிவாசன், வி.சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சங்ககிரி
இதேபோல், தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி மலைக்கோட்டையில் தமிழக அரசின் சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று தீரன் சின்னமலையின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் சின்னமலையின் தியாகத்தைப் போற்றும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்திலும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.