உடுமலை, ஆக.3-
உடுமலை அருகே குடிநீர் விநியோகிக்கக்கோரி பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடட்னர். உடுமலை தாலுகா ஜே.என்.பாளையம் ஊராட்சி பாலார்துறை கிராமத்தில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர்வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து பல முறை அரசு அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கடந்த 29ம் தேதி பாலார்துறை மக்கள் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது, ஊராட்சி அதிகாரிகள் உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி மக்கள் குடிநீர் வழங்கக்கோரி வியாழனன்று காலை அப்பகுதிக்கு வந்த அரசு பேருந்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து போராட்ட இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பேருந்தை விடுவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: