கோவை, ஆக. 3-
மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்பாமல், ஒப்பந்தங்களை மீறி ஊழியர்கள் மீது பணிச்சுமை ஏற்றுவதை கண்டித்து கோவையில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் புதனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை மண்டல தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஐக்கிய சங்கத்தின் கண்ணன் தலைமை தாங்கினார்.

இதில்களப்பணி காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். களப்பிரிவில் பதவி உயர்வில் உள்ள தேக்க நிலையை அகற்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும். தொழிற்சங்க விரோத போக்கை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைககள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் சம்மேளன பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் நாகராஜ், மதுசூதனன், காளியப்பபூபதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.