மதுரை;
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், 26 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் விடுமுறை வழங்க உத்தரவிடக்கோரி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அவரது தாயார் ராஜேஸ்வரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தரேஷ், என். சதீஷ்குமார் அமர்வில் புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் லஜபதிராய், திருமுருகன் வாதிட்டனர்.

ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டையானது இந்திய அரசின் வயர்லெஸ் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டம் சார்ந்தது என்பதால், பரோல் வழங்க முடியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், ரவிச்சந்திரன் தாயாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: