புதுதில்லி;
குஜராத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு, ஆகஸ்ட் 8-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பல்வந்த் சிங் ராஜ்புத், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, இந்த மாநிலங்களவைத் தேர்தலில் ‘நோட்டா’வை (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைத் தெரிவிக்கும் வாய்ப்பு) அறிமுகப்படுத்தப் போவதாக தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்தது.

ஆனால், இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனையைக் கிளப்பி அமளியிலும் ஈடுபட்டு வந்தன. மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, இன்று விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: