யு டியூபில் குழந்தைகளுக்கான கதைகள், பாடல்களை அழகாக அனிமேஷன் முறையில் ஒளிபரப்பும் சூ சூ டிவி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

நாட்டில் உள்ள 40 கோடி  இன்டர்நெட் பயனாளிகள்  தகவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்,  நவீன செல்பேசிகள் நியாயமான விலையில் கிடைப்பது ஆகியவை  இந்தியாவில் ஆன் லைன் வீடியோ நுகர்வை மிகப்பெரிய வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
சூ சூ  டிவியின் டைமண்ட் கிரியேட்டர் பிளே பொத்தனை அழுத்தி சந்தாதாரராக மாறியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துவிட்டது. 2013 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் சூ சூ டிவி வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இதன் 200 வீடியோக்களின் சந்தாதாரர்கள்  எண்ணிக்கை மட்டும் ஒருகோடியே 40 லட்சத்தை கடந்துவிட்டது.  உலகில் தற்போது குழந்தைகளுக்கான உள்ளடக்கங்களை தரும் முன்னணி  அலைவரிசையாக சூ சூ டிவி உருவெடுத்துள்ளது. கதைகளை சொல்வதில் உலகில் நாமும் போட்டிபோடும் அலைவரிசையாக உருவெடுக்கமுடியும் என்பதற்கு இந்த தொலைக்காட்சி  ஒரு சிறந்த உதாரணமாகும்.

Leave A Reply

%d bloggers like this: