புதுதில்லி;
வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66 கோடி சொத்து குவித்த வழக்கில், தங்களுக்கு விதிக்கப்பட்ட நான்காண்டு சிறைத்தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், அமிதவராய் அமர்வு முன்பு புதனன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது.

இந்நிலையில், சீராய்வு மனுவை நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் விசாரிக்க சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புதனன்று விசாரணைக்கு வருவதாக இருந்த சசிகலாவின் சீராய்வு மனு, விசாரணைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. நீதிபதி நாரிமன் அல்லாத வேறு ஒரு அமர்வு, பின்னர் இவ்வழக்கை விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: