தீக்கதிர்

சத்துணவு முட்டையில் ஊழலை அம்பலப்படுத்திய நற்பணி இயக்கத்தினருக்கு கமல் பாராட்டு

பெரம்பலூர்
பெரம்பலூர் அங்கன்வாடி பள்ளிகளில் முட்டை ஊழலை அம்பலப்படுத்திய நற்பணி மன்றத்தினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் அங்கன்வாடிகளில் சத்துணவு முட்டைகள் அழுகி இருந்ததை கமல் நற்பணி இயக்க உறுப்பினர்கள் முத்துக்குமார், சாதிக் பாட்ஷா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆய்வின் போது கண்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று கமல்ஹாசன் சத்துணவில் முட்டை வழங்கியதில் நடந்த ஊழலை அம்பலப்படுத்தியது பெருமையே என்று தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார். மேலும் சட்ட மீறல்கள் வேண்டாம், நற்பணி இயக்க வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.