தில்லி;
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கம்பீர் ஏழைக்குழந்தைகளின் பசியை போக்கவும், கல்விக்காகவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

தனது “கவுதம் கம்பீர் பவுண்டேஷன்” மூலம் தில்லியில் “சமூக சமையலறை”என்ற பெயரில் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு தினமும்(365 நாட்களும்) உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலால் மரணமடைந்த 150-க்கும் மேற்பட்ட வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் கம்பீர் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கம்பிர் தனது டுவிட்டர் பக்கத்தில், “உலகில் எவரும் பசியுடன் தூங்கக் கூடாது என்ற பிராத்தனை என் உதடுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்” என்று பதிவேற்றம் செய்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: