கவுகாத்தி;
அசாம் மாநிலத்தில் அண்மையில் பெய்த கனமழையால், அங்குள்ள லகிம்பூர், ஜோர்ஹாட், கோலாகாட், சச்சார், தெம்ஜாய், பிஸ்வாநாத், கரிம்கஞ்ச், சோனிட்பூர், நாகான் உள்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

25 லட்சம் பேர் வெள்ள இடர்பாடுகளில் சிக்கியுள்ளனர். 82 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அசாம் மக்களுக்கு உதவும் வகையில், பாலிவுட் நடிகர் அமீர்கான், 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக மாநில அரசுக்கு வழங்கியுள்ளார்.

தனது ரசிகர்களையும் உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அமீர்கானில் இந்த செயலுக்கு அசாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால் நன்றி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: