ஈரோடு, ஜூலை 31-
மூன்று மாதங்களுக்கும் மேலாக வழங்கப்படாத கூலியை உடனே வழங்கக் கோரி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்கள் கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரக வேலை திட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாத கூலியை உடனே வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.400 கூலியும், வேலை நாட்களை 200 நாட்களாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கும் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கொடுமுடி வட்டாரவளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர்.விஜயராகவன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.முத்துசாமி, கொடுமுடி ஒன்றிய செயலாளர் கே.பி.கனகவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சி) சாந்தி மற்றும் அதிகாரிகள் பாஸ்கர் பாபு, காந்திமதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.