உதகை, ஜூலை 31-
அடர்ந்த காட்டில் வனவிலங்குகளுக்கு மத்தியில் குடிநீர் பிடிக்கும் அவல நீடிப்பதை களைய மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி படுகர் இனமக்கள் மனு அளித்தனர். உதகையை அடுத்த கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட பட்ட கொரை பகுதியைச் சேர்ந்த படுகர் இனமக்கள் 30க்கும் மேற்பட்டோர் திங்களன்று ஊர் தலைவர் பெள்ளி தலைமையில் நீலகிரி மவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

இதில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆறு மாதகாலமாக குழய்களில் குடிநீர் வரவில்லை. இதனால் பட்டகோரை பகுதியில் குடியிருந்து வரும் மக்கள் அனைவரும் 4 கி.மீ தூரம் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று, காட்டு விலங்குகளுக்கு மத்தியில் அங்குள்ள சிறிய ஒடையில் பல மணிநேரம் காத்திருந்து குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் எடுத்து வரும் நிலையே காணப்படுகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்துக்கும், அச்சத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக, ஊராட்சி அதிகாரிகளுடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மாவட்ட ஆட்சியரிடமும் கடந்த நான்கு வாரமாக குடிநீர் வேண்டி மனு அளித்து வருகிறோம். எனவே, இம்முறையாவது தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பட்டகொரை பகுதியில் வசித்துவரும் அனைவரும் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: