கோவை, ஜூலை 31-
விவசாய பயிர் காப்பீட்டு திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதை கைவிடக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். விவசாய பயிர் காப்பீட்டு திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதைகைவிட வேண்டும்.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டில் கடன் வழங்குவதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தால் விவசாயிகளின் வாழ்வதாரம் பாதிக்கப்படும். மேலும் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மட்டுமே பயிர்காப்பீட்டு வழங்க வேண்டும். விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி பயிர் காப்பீட்டு திட்டத்தை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தொரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏர்கலப்பையில் மனிதர்களை பூட்டி தார் சாலையில் உழும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: