கூடலூர், ஜூலை 31-
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான தோழர் ஆ.முத்துசுந்தரம் சனியன்று காலமானார்.  இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், முன்னாள் அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஆரம்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அஸரா, மாநிலக்குழு உறுப்பினர் பரமேஸ்வரி, ஒருங்கிணைப்புக் குழுவின் சுந்தரம், சிபிஎம் சார்பில் தங்கராஜ், அனைத்துத்துறை ஒய்வூதியர் சங்க தலைவர் வார்க்கிஸ், சிஐடியு சங்கத்தின் ராதாகிருஷ்ணன், யோகசசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மறைந்த தோழர் ஆர்.முத்துசுந்தரம் உருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: