புவனேஸ்வர்,
ஒடிசாவில் மின்னல் தாக்கியதில் 11 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் பத்ரக், பாலாசூர் மற்றும் கேந்திரபாரா உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் தாக்கியதில் வயல்வெளிகளில் வேலை செய்த 11 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒடிசாவில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: