சங்ககிரி, ஜூலை 31-
இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்ககிரி தாலுகா மாநாடு சங்ககிரி வட்டம் குள்ளம்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு வட்டத்தலைவர் ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

மூத்த உறுப்பினர் தவுசியப்பன் கொடியேற்றினார். விவசாய தொழிலாளர் சங்க துணைச் செயலாளர் எ.ராமமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். விதொச மாவட்ட பொருளாளர் மாதேஷ்வரன், சிபிஎம் வட்டச் செயலாளர் சேகர், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தீர்மானங்கள் இதைத்தொடர்ந்து, விவசாய பம்செட்க்கு இலவச மின்னிணைப்பு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும். கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு இம்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தாலுகா தலைவராக சுப்ரமணி, செயலாளராக மாணிக்கம், பொருளாளராக செல்வமணி உள்ளிட்ட 15 பேர் கொண்ட வட்டக் குழு அமைக்கப்பட்டது. இறுதியில் மாவட்ட பொருளாளர் ஆர்.குழந்தைவேல் நிறைவுரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.