திருப்பூர் மாவட்டதிற்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 10 ஏக்கர் ஒதுக்கப்பட்டு அதில் 16 நீதிமன்றங்கள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. ஒன்றரை வருட காலத்தில் கட்டுமானப் பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் தரைதளத்தில் மாவட்ட நீதிமன்றம் – 1, குற்றவியல் நடுவர் நீதி மன்றம் -1, குற்றவியல் நடுவர் நீதி மன்றம் -2, மாவட்ட நீதிமன்றம் – 2, முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -1, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் – 3, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் – 4, மாவட்ட நீதிமன்றம் – 3 ஆகிய நீதிமன்றங்களும், முதல்தளத்தில் மாவட்ட நீதிமன்றம் – 4, பயிற்சியர் மாவட்ட நீதிமன்றம் – 4, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் – 5, துணை நீதிமன்றம் -1, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் – 5, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் -6, துணை நீதிமன்றம் – 2 என இரண்டாம் தளத்தில் 8 நீதிமன்ற வளாகம், நீதிபதியறை, சுருக்கெழுத்தர் அறை, பதிவறை, சேமிப்பு அறை, நீதிமன்ற அலுவலகங்கள், தலைமை எழுத்தர், சிரசுதாரர், காவலர் அமர்வு மற்றும் ஓய்வு அறை, வழக்கறிஞர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறானாளிகள் உட்பட ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை வசதி, கட்டடமும். மூன்றாம் தளத்தில் நீதிமன்ற நூலகம், ஆய்வுக்கூடம், இருபாலருக்கான கழிப்பறை கட்டடமும் கட்டப்பட உள்ளன. மேலும் 8 மின் தூக்கிகளும் அமைக்கப்பட உள்ளன.

அதேபோல் நீதிபதிகளுக்கு குளிர்சாதன வசதி அறைகள் கட்டப்படவுள்ளன. இவ்வளாகத்தில் கண்காணிப்பு கேமிரா, பொது தகவல் வசதி, தீயணைப்பு வசதி, சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சூரிய மின்சக்தி 3 கி. வாட்., உள்தொலைத் தொடர்பு வசதிஆகிய அதிநவீன வசதிகளும் அமைக்க்கப்பட உள்ளன.அதே பகுதியில் மாற்றுமுறை தீர்வுமைய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கு நீதிபதி குலுவாடி ஜி.ரமேஸ் துவக்கி வைத்தார். இவ்வளாகத்தில் தியான அறை, லோக் அதாலத், செயலாளர் அறை, மாவட்ட சட்டப்பணிக்குழு அலுவலகம், மாவட்ட சட்ட பணிக்குழு தலைவர் அறை, காத்திருப்பு ஓய்வு அறை, அலுவலர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை கட்டடம் என தரை தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு தளங்களில் கட்டப்படவுள்ளன. இங்கும் தேவையான குளிர்சாதன வசதி அறை மற்றும் தீயணைப்பு வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்படவுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.