உதகை, ஜூலை 28-
இன்சூரன்சு பிரிமியம் மற்றும் சேவைக்கு கட்டணம் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி உதகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நீட்தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்குகோரி அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் பங்கேற்ற மனித சங்கிலிபோராட்டம் வியாழனன்று உதகை காப்பிஹஸ் பகுதியில் நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்சூரன்சு பிரிமியம் மற்றும் சேவை கட்டணங்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி அகில இந்திய இன்சூரனஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் பிரதமருக்கு மனு அனுப்பும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கத்தை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் துவக்கி வைத்தார். கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பெள்ளி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன், திமுக மாவட்டச் செயலாளர் ப.முபாரக், இளித்தொரை ராமசந்திரன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

மேலும், இந்த கையெழுத்து இயக்கத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவை கோட்ட இணை செயலாளர் நாகேசுவரன், உதகை கிளை செயலாளர் கோபால், பொருளாளர் தினேஷ்ராஜ், சதாசிவம், கே.சிவக்குமார், பிரகாஷ், ஜிவரத்தினம், மஞ்சுளா, நந்தகோபால் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.