பொள்ளாச்சி, ஜூலை 27-
நெடுஞ்சாலைத்துறையினை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து பொள்ளாச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறையினை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். நெடுஞ்சாலை துறையிலுள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும். கருணை அடிப்படையில் வேலை வேண்டி காத்திருப்போருக்கு பணி நியமனம் வழங்கிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் முன்பு வியாழனன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சங்கத்தின் எஸ்.மோகன் தலைமை வகித்தார். கோவை மாவட்ட இணை செயலாளர் மு.சாமிகுணம் சிறப்புரையாற்றினார். பொள்ளாச்சி கோட்டத் தலைவர் வே.சின்னமாரிமுத்து, கோவை மண்டல செயலாளர் ம.தங்கமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.