கோவை, ஜூலை 27-
கோவை மதுக்கரை ஈச்சனாரி சாலையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மதுக்கரையிலிருந்து ஈச்சனாரி செல்லும் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் நகர் குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கும்பணி நடைபெற்றுவருகிறது. இந்த கடை அமைத்துள்ள இடத்தை சுற்றிகோவில், பள்ளி மற்றும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளதால் இங்கு டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி, அப்பகுதி பெண்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.