புதுதில்லி;
கார்கில் வெற்றியின் 18-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லி அமர்ஜவான் ஜோதியில், முப்படைத் தளபதிகளுடன் சென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, மலர்வளையம் வைத்து மரியாதை அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல நாடு முழுவதும், போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், முப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து, மரியாதை செலுத்தினர். புதுச்சேரி கடற்கரைச் சாலையிலுள்ள கார்க்கில் போர் நினைவுச் சின்னம் முன்பும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டத்தில் உள்ள டிராஸ் பகுதியிலுள்ள, ராணுவ வீரர்கள் நினைவிடத்தில், முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை, பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்ததால், இருநாடுகளுக்கு இடையே கடந்த 1999-ஆம் ஆண்டு போர் நடைபெற்றது. இந்த போரில் இந்தியா வெற்றிபெற்றதை அடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.