தில்லி,

மத்திய சட்ட அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்ட ஆவணத்தின்படி நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அரசுத்துறை வழக்குகளில், ரயில்வே துறையின் வழக்குகள் முதல் இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய சட்ட அமைச்சகம், இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்டுள்ள ஓர் ஆவணத்தில், அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளது. இதில் மொத்தம் 1,35,060 அரசு வழக்குகளும், அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக 369 அவதூறு வழக்குகளும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் மிக அதிக எண்ணிக்கையில் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் அரசுத்துறையான ரயில்வே துறை உள்ளது. ரயில்வே துறைக்கு எதிராக 66 ஆயிரத்து 685 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில், 10 வருடங்களாக நிலுவையில் உள்ள வழக்குகள் மட்டும் 10,464. ரயில்வே துறைக்கு அடுத்த நிலையில், நிதி அமைச்சகம் தொடர்பாக 15,646 வழக்குகளும், தகவல் தொடர்பு அமைச்சகம் தொடர்பாக 12,621 வழக்குகளும், உள்துறை அமைச்சகம் தொடர்பாக 11,600 வழக்குகளும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

Leave A Reply

%d bloggers like this: