தீக்கதிர்

கிணறு வெட்டும் போது விபத்து – ஒருவர் பலி

பெரம்பலூர்,
பெரம்பூர் பகுதியில் கிணறு வெட்டும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாரணமங்கலம் பகுதியில் கிணறு வெட்டும் பணியின்போது தொழிலாளர்கள் மீது பாறை சரிந்து விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.