திஸ்பூர்,

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஞாயிறன்று பெய்த கன மழைக்கு மரிகாவன் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலியானர். இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. சுமார் 22,000 மக்கள் 118 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சல்மாரா மாவட்டத்தில் 3 லட்சம் பேரும், துப்ரி மாவட்டத்தில் 1.88 லட்சம் பேரும், மரிகாவன் மாவட்டத்தில் 1.60 லட்சம் பேரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சம் ஹெக்டார் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என மாநில பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: