வாய்க்கு வந்தபடி உளறுவதில் கின்னஸ் சாதனை வைத்தால் மோடியை அடிக்க ஆளில்லை என்ற நிலைமைதான் இருக்கிறது. Bluff Master Modi என குஜராத்திலிருந்து வெளியிடப்பட்ட புத்தகம் இப்போது பரபரப்பாக விற்பனையில் இருக்கிறது. ஆராய்ந்து பார்த்ததில், பிரதமரான இந்த மூன்று வருடங்களில் மோடி இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொய்களையும், உளறல்களையும் 56 இஞ்ச் மார் தட்டி பேசி இருப்பதாக இணையதளத்தில் ஒரு ஆவணக் குறிப்பு இருக்கிறது.

அந்த உளறல்களையும் அண்டப்புளுகுகளையும் கொஞ்சம் தொகுத்துப் பார்க்கத் தோன்றியது. ஆரம்பிப்போம்.

மோடியின் பொய்களும் புரட்டுகளும் -1

“பல வருடங்களாக பொது வாழ்க்கையில் இருந்தாலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்து ஆட்சி நடத்தி இருந்தாலும், வாஜ்பாய் அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு கூட கிடையாது” என பாஜக தலைவர்களின் எளிமையான வாழ்க்கையை குறிப்பிட்டு கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது ஜனவரி, 12, 2014ல் கோவாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார்.

ஆனால் 2004ல் பாராளுமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்த மனுவில் வாஜ்பாயே தனக்கு multi-storeyed apartment in East of Kailash, New Delhi இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

(தொடரும்)

Mathava Raj

Leave a Reply

You must be logged in to post a comment.