கடசித் தோழர் ஒருவரை போலீஸ் பிடித்துச் சென்றுவிட்டது என்ற தகவல் அம்மா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

உடனே புறப்பட்டார்.அம்மா அவர்களைப்பற்றி அறிந்திராத அந்த போலீஸ் அதிகாரி அலட்சியமாக நடந்திருக்கிறார்.அம்மா அவர்கள் அந்தத் தோழரை கூட்டிவந்த பிறகு அங்கிருந்த ஸ்டேசன் ரைட்டர் அந்த அதிகாரியிடம்  அம்மா யார்என்ற விவரங்களைக்கூற அதிர்ந்து போய்விட்டாராம்.அதன் பிறகு அம்மா அவர்களைச் சந்தித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஒரு மாநாட்டின் நுழைவு
வாயிலில் அம்மா அவர்களின் பிரமாண்ட கட்டவுட்டை நமது தோழர்கள் வைத்துவிட்டர்கள்.அம்மா வந்திறங்கியவுடன் அந்தக்கட்டவுட்டைப் பார்த்திருக்கிறார்.முகமே சிவந்து விட்டது.”யார் இந்தக் கிழவி?”என்று
கேட்டிருக்கிறார்.நமது தோழர்கள் தயங்கித்தயங்கி “நீங்கதான்ம்மா”என்றிருக்கிறார்கள்.
இதென்ன பழக்கம்? யார் உங்களை வைக்கச் சொன்னது?முதலில் இதைக் கழற்றுங்கள்” என்று அவர்களைப் பிடிபிடியென்று பிடித்தவர் “நமது முழுநேர ஊழியர்கள் எத்தனை பேர் கஞ்சி தண்ணி யில்லாமல் அரைவயிறும் குறைவயிறுமாய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
வெட்டியாக இப்படி காசை கரியாக்கி இருக்கிறீர்களே”என்று திட்டித்
தீர்த்திருக்கிறார். K.P.ஜானகியம்மாள் என்ற பெயர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருக்கிறது என்றால் அதற்
குக் காரணம் அவரது அயராத உழைப்பும் அபார துணிச்சலும்தான். “அம்மா நீங்க
வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமையைக் கொடுத்தீர்களே..உங்
களுடைய திருவாயால் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் என்னுடையதும் ஒன்று என்ப
தே எனக்குக் கிடைத்த பெருமை அம்மா.” அம்மா உங்கள் புகழ் என்றென்றும் நிலைத் திருக்க நீங்கள் காட்டிய வழியில் தொடர்ந்து உழைப்போம்.. உழைப்போம்…உழைப்போம் .

  • மதுரைபாலன்

Leave a Reply

You must be logged in to post a comment.