திருநெல்வேலி;
மகேந்திரகிரியில் இஸ்ரோ மையத்தில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமாக உயர் அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ மையத்தின் திரவ இயக்க அமைப்பு மையம் உள்ளது. இங்கு நடைபெற்ற ஊழல் தொடர்பாக மையத்தின் குழு இயக்குநர் ஜெசி ஃபுளோரா, துணைப் பொது மேலாளர் ஜேசம்மாள், பொறியாளர் செபாஸ்டின் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக இஸ்ரோ மைய உயர் அதிகாரிகள் மகேந்திரகிரியில் முகாமிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் சிலர் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்பதால் ஊழியர்களிடம் அச்சம் நிலவுகிறது.

Leave A Reply

%d bloggers like this: