சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் பெண் குழந்தையை பெற்றதற்காக அந்த பெண்ணை கணவரின் சகோதரர் தாக்கிய சம்பவத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலாவைச் சேர்ந்த மீனா காஷ்யப் என்ற பெண் தல்ஜித் சிங் என்பவரை மணந்தார். இந்நிலையில் மீனா காஷ்யப்பிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தையை விரும்பாத தல்ஜித் சிங் குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர். மீனா காஷ்யப்பை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். இதையடுத்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த மீனா காஷ்யப்பை தல்ஜித் சிங்கின் சகோதர்களும் நண்பர்களும் ஹாக்கி மட்டையால் அடித்து சித்தரவதை செய்துள்ளனர். இந்த கொடூர காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த காட்சிகள் தற்போது இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். கொடூரமான இந்த சம்பவத்திற்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave A Reply

%d bloggers like this: